Breaking News
L

Local News

திருப்பாலீஸ்வரர் கோவில் 400 வருடத்திற்கு பிறகு திறப்பு...


திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் கோவிலில் 400 ஆண்டுகளுக்கு பின், பள்ளியறை திறக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. பொன்னேரி அடுத்த, திருப்பாலைவனம் பகுதியில் உள்ள லோகாம்பிகை உடனுறை திருப்பாலீஸ்வரர் கோவிலில் பூஜை நடைபெறாமல் இருந்ததால் பக்தர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தி, பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது அங்கு புதிதாக பள்ளியறை, கலைஞாகளுடன் நிர்மாணம் செய்யப்பட்டு நேற்று காலை 9 மணிக்கு பள்ளியறை திறக்க பட்டு பூஜை சிறப்பாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கூனம்பட்டி, கல்யாணபுரி ஆதினம் சிவஞானகுரு ஸ்ரீலஸ்ரீ ராஜ சரவண மாணிக்க வாசக குரு சுவாமிகள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று,பள்ளியறையை திறந்து வைத்தனர். இதில் பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Share

L

Latest Videos