Breaking News புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர்கள் பெயரில் பண மோசடி- உஷாராக இருக்கும்படி காவல்துறை எச்சரிக்கை ! புல்வாமா தாக்குதல்: மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ- முகம்மது அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை !
L

Local News

தேசிய​ கீதத்தை அவமதிபவர்க்கு சிறை


நமது அண்டை நாடான சீனாவில், தேசிய கீதத்தை அவமதிக்கும் நபர்களை, 15 நாட்கள் சிறையில் அடைக்கும் வகையிலான சட்ட திருத்த மசோதா , செப்டம்பரில், அந்நாட்டு பார்லி.,யில் நிறை வேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த சட்டத்தை திருத்தும் வகையில், தேசிய கீதத்தை அவமதிக்கும் நபர்களுக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில், சட்ட திருத்தம் செய்ய, அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான வரைவு மசோதா, அந்நாட்டு பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அரசின் அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளிலும், தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும். விதிகளைமீறி, விளம்பரங்களிலோ, வேறெந்த தனியார் நிகழ்ச்சிகளிலோ, தேசியகீதம் அல்லது அதன் பின்னணி இசையை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மூன்று ஆண்டு சிறையில் அடைக்கப்படுவர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த​ சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share

L

Latest Videos