Breaking News
L

Local News

இங்கிலாந்து அபராத வெற்றி...


மகளிர் முத்தரப்பு டி20 தொடரின் 3 வது லீக் போட்டியில்,இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. தொடக்க வீராங்கனை டேனியல்லி வியாட் அதிரடியாக சதம் விளாசினார். மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகள் மித்தாலி ராஜ் 53 ரன், ஸ்மிரிதி மந்தனா 76 ரன், விளாசினார். கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் 30,வேதா கிருஷ்ணமூர்த்தி 3 ரன்னில் ஆட்டமிழந்தனர். பூஜா வஸ்த்ராகர் 22 ரன்,அனுஜா பட்டீல் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்ததாக இங்கிலாந்து அணி 18.4 ஓவரில் 3விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்து அபாரமாக வென்றது. இந்த போட்டியில் வியாட் சிறந்த வீராங்கனை விருது பெற்றார்.இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதுகின்றன.

Share

L

Latest Videos