வாஜ்பாய் சுகவீனம்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த கெஜ்ரிவால்
Aug 16, 2018
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று 50-வது பிறந்த நாள். ஆனால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கவலைக்கிடமாக மருத்துவமனையில் இருப்பதால் தனக்கு எந்தவித பிறந்தநாள் கொண்டாட்டங்களும் வேண்டாம் என கூறி நிகழ்ச்சிகளையும் ரத்து செய்யுமாறு கூறிவிட்டார். கெஜ்ரிவாலின் 50-வது பிறந்த நாளுக்காக அவருக்கு பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதை தவிர இந்தியா முழுவதும் உள்ள ஆம்ஆத்மி நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.ஆனாலும் தமது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டாம் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கெஜ்ரிவாலின் ஊடக ஆலோசகரான நாகேந்தர் சர்மா அறிவித்திருக்கிறார.