Breaking News ஆண்டிப்பட்டியில் ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் பறிமுதல் - வருமானவரித் துறையினர்!
L

Local News

சென்னையில் 3 தொகுதிகளில் விஜயகாந்த் இன்று பிரசாரம் !


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலம் குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று, கடந்த பிப்ரவரி மாதம் சென்னை திரும்பினார். சாலிகிராமம் வீட்டில் ஓய்வில் இருந்த அவரை அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். உடல் நலக்குறைவு ஏற்பட்டபோதிலும், நாடாளுமன்ற தேர்தல், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்தும், கூட்டணி விஷயத்திலும் விஜயகாந்த் கவனம் செலுத்தினார். தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில் விஜயகாந்த், பிரசார கூட்டங்களில் கலந்துகொள்ளாதது தே.மு.தி.க.வினர் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. தேர்தல் பிரசாரம் நாளை ஓயும் நிலையில், விஜயகாந்த் சென்னையில் 3 தொகுதிகளிலும் இன்று பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான அறிவிப்பை தே.மு.தி.க. நேற்று வெளியிட்டது. 3 தொகுதிகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் விஜயகாந்த் வேன் மூலம் பிரசாரம் செய்ய இருக்கிறார். இன்று மாலை 4 மணிக்கு மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட வில்லிவாக்கம் பகுதியில் விஜயகாந்த் பிரசாரத்தை தொடங்குகிறார். அதனை தொடர்ந்து வட சென்னை தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூர், மூலக்கடை, கொடுங்கையூர் கண்ணதாசன் நகர், திரு.வி.க. நகர் ஆகிய பகுதிகளில் அவர் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். அதனை தொடர்ந்து தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதியில் விஜயகாந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

Share

L

Latest Videos