Breaking News முன்னாள் மத்திய நிதி அமைச்சர் உடல்நலக்குறைவால் இன்று அருண் ஜெட்லீ காலமானார்
L

Local News

ரெட்டை ஏரியில் இருந்து அடுத்த மாதம் தண்ணீர் வினியோகம்- குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல் !


சென்னை நகருக்கு குடிநீர் ஆதாரங்களாக திகழும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளன. இதன் காரணமாக நகர் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை நகரின் தினசரி குடிநீர் தேவை 820 மில்லியன் லிட்டர் ஆகும். தற்போது 550 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. அதனை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளில் குடிநீர் வாரியம் இறங்கி உள்ளது. சென்னை ரெட்டை ஏரி, பெரும்பாக்கம், அயனம்பாக்கம் ஆகிய ஏரி தண்ணீர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உகந்தவை என்பது சோதனையில் தெரிய வந்தது. எனவே இதில் முதல்கட்டமாக ரெட்டை ஏரியில் இருந்து அடுத்த மாதம் தண்ணீர் எடுக்கப்படும். அங்கிருந்து அன்றாடம் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் குழாய் மூலம் கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலைதண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை குடிநீர் வாரியம் போராடி வருகிறது. அதிகாரிகள், பணியாளர்கள் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பொதுமக்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். கார்கள் கழுவுதல், தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சல், வீட்டு முன்பு கோலம் போடுதல் போன்றவற்றிற்கு குடிநீர் வாரியத்தின் தண்ணீரை பயன்படுத்த வேண்டாம். ‘ஷவர்’ மூலம் குளிப்பதை தவிர்த்துவிட்டு, வாளி மூலம் குளிக்கலாம். யத்துக்கு கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்படும்.

Share

L

Latest Videos