Breaking News
L

Local News

அனிஷ் தங்கம் பதக்கம் வென்றார்....


ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் நேற்று நடந்தது. இதில் ஆண்களுக்கான 25 மீ, "ரேபிட் பயர் பிஸ்டல்" பிரிவு தகுதிச் சுற்றில், இந்தியாவின் அனிஷ் பன்வாலா 585.20 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இந்தியாவின் அன்ஹாத் ஜவான்டா,ராஜ்கன்வர் சிங் சாந்து, முறையே 5,6 வது இடங்களை பிடித்து இறுதி சுற்றிற்கு தகுதி பெற்றனர். மற்ற இந்திய வீரர்களான ஆதர்ஷ் சிங், ஜப்தியேஷ் சிங் ஜாஸ்பால், மன்தீப் சிங் முறையே 7,8,9 வது இடங்களை பிடித்து இறுதி சுற்றின் வாய்ப்பை இழந்தனர். இந்தியாவின் அனிஷ் 29 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் பதக்கம் வென்றார். இந்த தொடரில் இந்தியா 6 தங்கம் கிடைத்தது. தனிநபர் பிரிவில் இந்தியாவிற்கு 3 வது தங்கம். சீனாவின் வீரர்கள் வெள்ளி,வெண்கலம் பதக்கங்களை வென்றனர். இந்த தொடரில் சீனா 7 தங்கம், 4வெள்ளி, 6வெண்கலம் வென்று முதலிடத்தில் உள்ளது. இந்தியா 6தங்கம்,3வெள்ளி,6வெண்கலம் என 15 பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது.

Share

L

Latest Videos