Breaking News
L

Local News

யூகி பாம்ப்ரி மூன்றாவது சுற்றில்....


அமெரிக்காவில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில் பரிபாஸ் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு.2வது சுற்றில் ஏ.டி.பி தரவரிசையில் 110 வது இடத்தில் உள்ள இந்தியன் யூகி பாம்ப்ரி, 'நம்பர்-12' வீரரான பிரான்சின் லூகாஸ் பியூலி மோதினர்.இந்த போட்டி ஒரு மணி நேரம் 19 நிமிடம் நீடித்து அபாரமாக ஆடிய பாம்ப்ரி, 6-4,6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். இது பாம்ப்ரியின் சிறந்த வெற்றியாக அமைந்தது. இதற்கு முன் 2017 நடந்த சிட்டி ஓபனில், "நடப்பு சாம்பியன்" மற்றும் உலகின் "நம்பர் 22" வீரரான பிரான்சின் மான்பில்சை வீழ்த்தி இருந்தார். தற்போது யூகி பாம்ப்ரி, உலகின் நம்பர் 21 வீரரான அமெரிக்காவின் சாம் குயரே உடன் மோத உள்ளார்.

Share

L

Latest Videos